முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை : 5 வது நபர் போக்சோவில் கைது

பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை : 5 வது நபர் போக்சோவில் கைது

 பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வு

பிரபல பின்னணி பாடகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐதராபாத்தை சேர்ந்த பிரபல திரைப்பட பாடகி ஒருவர் தமிழ்,தெலுங்கு என பல படங்களில் பாடலை பாடியுள்ளார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.

பணி நிமித்தமாக தனது மகளை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தனது சித்தியின் வீட்டில் வளர்ந்த 15 வயது சிறுமியை சமீபத்தில் அவரது தாய், ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதால் தாய் சிறுமியிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

சிறுமி சித்தியின் வீட்டில் இருந்த போது சித்தியின் கணவர், சித்தி மற்றும் ஒரு உறவினர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சித்தி கீழ்பாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று மதபோதகருடன் சேர்ந்து பாடல் பாடி வந்துள்ளார். அதனால் சிறுமியும் தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது மதபோதகரும் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக சிறுமியின் தாயார் கடந்த ஏப்ரல் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியிடம் போலீசார் ரகசியமாக நடத்திய விசாரணையில் சிறுமியின் சித்தி, சித்தப்பா, உறவினர் மகன் மற்றும் கிருத்துவ பாதிரியார் ஆகிய நால்வரும் சேர்ந்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கிருத்துவ பாதிரியார் ஹென்றி பால்(38), சிறுமியின் சித்தி ஷகீனா ஷான்(38), ஜான் ஜெசில்(47), கிளாரா(23) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் போலீசார் தேடி வந்தனர்.

தங்களை போலீசார் தேடி வருவதை அறிந்த சிறுமியின் சித்தி சித்தப்பா உறவினர் மகன் மற்றும் கிருத்துவ பாதிரியார் ஆகியோர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23 ம் தேதி மதியம் கிருத்துவ பாதிரியார் ஹென்றி பால்(38), சிறுமியின் சித்தி ஷகீனா ஷான்(38), ஜான் ஜெசில்(47), கிளாரா(23) ஆகியோரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்கு நால்வரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. சிறுமியின் சித்தப்பா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அவருக்கு உதவியாக சிறுமியின் சித்தி செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல சிறுமியின் சித்தியான ஷகீனா ஷான், கீழ்ப்பாக்கத்தில் உள்ள சர்ச்சுக்கு பாடல் பாடுவதற்காக செல்லும்போது அங்கு பாதிரியார் ஹென்றியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணத்தினால் சிறுமிக்கு பாதிரியார் ஹென்றி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு சிறுமியின் சித்தி உதவி புரிந்தும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து நால்வரையும் சிறைக்கு அனுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் சிறுமியின் மாமன் முறையில் உள்ள ராஜேந்திரன் என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்ததையடுத்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Rape case