வெற்றிபெற்றார் சோனியா காந்தி! ரேபரேலி தொகுதி வரலாறு ஒரு அலசல்

இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் நீண்ட காலங்களாக எம்.பிக்களாக இருந்த தொகுதியாக இருந்தாலும், இந்த தொகுதியின் வளர்ச்சி சிறந்தநிலையில் இல்லை என்றே கூறப்படுகிறது.

news18
Updated: May 24, 2019, 4:39 PM IST
வெற்றிபெற்றார் சோனியா காந்தி! ரேபரேலி தொகுதி வரலாறு ஒரு அலசல்
சோனியா காந்தி
news18
Updated: May 24, 2019, 4:39 PM IST
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுமுடிந்துள்ளது. சுதந்திரமடைந்த இந்தியாவில் நடைபெறும் 17-வது மக்களவைத் தேர்தல் இது. இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி. அதனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக, இந்தியத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.(தமிழகத்தில் வேலூர் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை). இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த தொகுதிகளில் முக்கியமானது உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ஆஸ்தான தொகுதிதான் ரேபரேலி.

ரேபரேலி தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கோட்டைதான். சோனியா காந்தி, 2004-ம் ஆண்டிலிருந்து இந்த தொகுதியில் போட்டியிட்டுவருகிறார். இது அவருக்கு நான்காவது தேர்தல். அதனால், இந்த தொகுதியின் மீது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஊடகங்களும் இந்த தொகுதியின் மீது தனிக் கவனம் செலுத்தி தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அலசிவருகின்றன.


ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுவதால் மட்டும் அந்த தொகுதி நாடு முழுவதும் அடையாளம் காணப்படவில்லை. சோனியா காந்தியின் மாமியாரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ரேபரேலி நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட ஒன்றாக இருந்துவருகிறது. 1967-ம் ஆண்டு இந்திரா காந்தி முதன்முதலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் இந்திரா காந்தி மிகப் பெரும் வெற்றி பெற்றார். தொடர்ந்து, இரண்டு முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் இந்திரா காந்தி.

1975-ம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை கொண்டு வந்தார் இந்திரா காந்தி. நாடு முழுவதும் 21 மாதங்கள் அவசரநிலை அமலில் இருந்தது. அவசரநிலை பிரகடனம், இந்திரா காந்தியின் மீது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவசரநிலை காலம் முடிந்த பிறகு, 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி, அந்த தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டார். அதன்பிறகு, இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை.

இந்திரா காந்தி, அந்த தொகுதியில் போட்டியிடவில்லையென்றாலும், அந்த தொகுதி தொடர்ச்சியாக காங்கிரஸின் கோட்டையாகத் தான் இருந்து வருகிறது. 1999-ம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட்டார். 2004-ம் ஆண்டு, அமேதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்த சோனியா காந்தி ரேபரேலி தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். 2004-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Loading...

சோனியா காந்தி


2004-ம் ஆண்டில் சமாஜ்வாடி வேட்பாளர் அசோக் குமார் சிங்குக்கு எதிராக 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2009-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குஷ்வாஹாவுக்கு எதிராக 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடு முழுவதும் காங்கிஸூக்கு கடும் எதிர்ப்பு நிலவிய 2014-ம் ஆண்டிலும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அஜய் அகர்வாலுக்கு எதிராக 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தநிலையிலும் சோனியா காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ரேபரேலி என்றுமே காங்கிரஸின் கோட்டைதான் என்று மீண்டும் ஒரு முறை நிருபணம் செய்தார். சோனியா காந்தி, கடந்த மூன்றுமுறை போட்டியிட்டபோது அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இந்தமுறை, மரியாதை நிமித்தமாக ரேபரேலி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி ஆகிய தொகுதிகள் அக்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அதனால், இந்தமுறை சோனியா காந்தி வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி


கடந்தமுறை சோனியா காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வாலை நிறுத்தியிருந்தது பா.ஜ.க. அவர், சுமார் 1.75 லட்சம் வாக்குகள் வரை பெற்றிருந்தார். இந்தமுறை அஜய் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்காத பா.ஜ.க அந்தப் பகுதியில் செல்வாக்கு மிகுந்த தினேஷ் பிரதாப் சிங் என்பவரை களமிறக்கியுள்ளது. தினேஷ் பிரதாப் சிங்குக்கு ரேபரேலி தொகுதியில் நல்ல செல்வாக்கு என்பதால் பா.ஜ.க அவரை களமிறக்கியுள்ளது. அவர், கடந்த ஆண்டுதான் பா.ஜ.கவில் இணைந்தார். அதுவரையில் அவர் காங்கிரஸில் இருந்தவர். காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிரதாப் சிங், ‘காங்கிரஸ் கட்சி ஒரு தனியார் நிறுவனம் போல, ஒரு குடும்பத்துக்காக செயல்படுகிறது’ என்று கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

மண்ணின் மைந்தன் என்ற கோஷத்தைப் பயன்படுத்தி பிரதாப் சிங் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதாப் சிங் மூலம் சோனியா காந்திக்கு கடும் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்று பா.ஜ.கவும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த தொகுதியில் மட்டும், பிரதாப் சிங்குக்கு வாக்கு சேகரிக்க பா.ஜ.க தலைவர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர் சன்னி டியோல் ஆகியோரை களமிறக்கி அசத்தியது பா.ஜ.க.

உடல்நிலையின் காரணமாக, சோனியா காந்தி ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்காக பிரியங்கா காந்திதான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் நீண்ட காலங்களாக எம்.பிக்களாக இருந்த தொகுதியாக இருந்தாலும், இந்த தொகுதியின் வளர்ச்சி சிறந்தநிலையில் இல்லை என்றே கூறப்படுகிறது. இதுவும் தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்திக்கு எதிராக முக்கியப் பிரச்னையாக எதிரெலித்தது.

இன்றைய வாக்கு எண்ணிக்கையின் இறுதி கட்டத்தில் சோனியா காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலை வெற்றி பெறும் உள்ளார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...