• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொம்பா முளைத்திருக்கிறது? எஸ்.ஐ.யை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண் இன்ஸ்பெக்டர்... காவல்நிலையத்தில் பரபரப்பு

கொம்பா முளைத்திருக்கிறது? எஸ்.ஐ.யை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண் இன்ஸ்பெக்டர்... காவல்நிலையத்தில் பரபரப்பு

Youtube Video

”உதவி காவல் ஆய்வாளர் பிரபு, செல்போனில் ஏன் மரியாதை இல்லாமல் பேசினீர்கள்? என்று நியாயம் கேட்டுள்ளார்”

  • Share this:
    பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளிக்கச் சென்ற ஆண் உதவி காவல் ஆய்வாளரை மிரட்டி விரட்டியதாக, பெண் காவல் ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரபு. அவருடைய மனைவி சசிகலா. சொத்து தகராறு தொடர்பாக மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது உதவி ஆய்வாளரின் மனைவி சசிகலா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    புகார் தொர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உதவி காவல் ஆய்வாளர் பிரபு, செல்போன் மூலம் காவல் ஆய்வாளர் வனஜாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உதவி காவல் ஆய்வாளர் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது? என கண்ணியமில்லாமல் பேசியுள்ளார் காவல் ஆய்வாளர் வனஜா.

    இதையடுத்து காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்ற உதவி காவல் ஆய்வாளர் பிரபு, செல்போனில் ஏன் மரியாதை இல்லாமல் பேசினீர்கள்? என்று நியாயம் கேட்டுள்ளார். இதை அடுத்து ஆய்வாளர் வனஜா அவரிடம் கொந்தளித்துள்ளார்.

    புகாரை விசாரிக்க முடியாது என்று கூறிய காவல் ஆய்வாளர் வனஜா, உதவி ஆய்வாளர் பிரபுவை, காவல்நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு ஒருமையில் திட்டினார். புகாரை விசாரிக்காவிட்டால் புகார் மனுவை திரும்பக் கொடுக்குமாறும், எஸ்.பி.யிடம் கொடுத்து பார்த்துக் கொள்வதாக அந்த வீடியோவில் பிரபு கூறுகிறார். இதை அடுத்து கடும் சொற்களால் திட்டத் தொடங்கிவிட்டார் ஆய்வாளர் வனஜா.

    காவல்நிலையத்தில் இருந்த சிலர் பதிவு செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்த மக்கள், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த உதவிய ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால், தங்களின் நிலை என்ன என புலம்பி வருகின்றனர்.




    Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

    கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

    வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: