கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மேல் படிப்பிற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு தேர்வு அச்சம் காரணமா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என இருவேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30) இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (வயது 27) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் .படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (மே-19) மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் ராசி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தாயார், டாக்டர் செந்தாமரை (இவரும் மருத்துவர்) மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு உள்பக்கம் தாழிட்டிருந்ததால் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது, ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6 வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ.விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
Must Read : திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. - திருச்சி சிவா
இளம் மருத்துவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா அல்லது நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் தேர்வு அச்சம் காரணமா என்ற இரு வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்- எஸ்.யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.