ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கைது செய்யாத போலீசார்... டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் வேட்பாளர்

Youtube Video

சென்னையில், ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டதால், மை இந்தியா கட்சி வேட்பாளர் வீரலட்சுமி சென்னை விமான நிலையம் எதிரே உள்ள டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

  • Share this:
    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனர் தலைவராக உள்ளார். மை இந்தியா கட்சி சார்பில், பல்லாவரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். மார்ச் 17ம் தேதி வீரலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாசப் புகைப்படம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அருவருக்கத் தக்க வகையில் ஆபாச வீடியோக்களும் வரத் தொடங்கின.

    அதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி போலீசாரிடம் புகாரளித்தார். அதோடு நிற்காமல், 3 நாட்களில் அந்த மர்ம நபர்களைப் போலீசார் கண்டுபிடிக்காவிட்டால், தானே அவர்களைப் பிடித்து அவர்களின் ஆணுறுப்பை அறுக்கப் போவதாகவும் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டார்.

    புகார் அளித்து பல நாட்களாகியும் போலீசார் அந்த வழக்கை கிடப்பில் போட்டதால் கோபமடைந்த வீரலட்சுமி, தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதி காலை 11 மணியளவில், சென்னை விமானநிலையம் எதிரே உள்ள டவர் மீது ஏறினார். குற்றவாளியை கைது செய்யக்கோரி 2 மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



    மேலும் படிக்க... வாக்களிக்க சென்றபோது பாஜக கொடி கட்டிய காரில் பயணித்த விவகாரம் : நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு

    தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கி கொண்டு வந்தனர். ஓரிரு நாட்களில் குற்றவாளிகளைக் கைது செய்வதாக போலீசார் வாக்குறுதியை அளித்ததை அடுத்து வீரலட்சுமி போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: