வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு ₹ 86.5 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றுசேர்ந்து 84.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றுசேர்ந்து 84.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து மற்றும் அவனின் கூட்டாளிகள் வனத்துறையுடைய இடத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் அவர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் ரவுடிகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் காவலர் சுப்பிரமணியன் வீர மரணமடைந்தார்.

Also read: பனியன் தொழிலை விடுத்து விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் வெற்றி அடைந்த தம்பதி

இன்று காவலர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு தென் மண்டல ஐஜி முருகன் சென்றார். 86.5 லட்சம் ரூபாய் தனியார் வங்கியில் வைப்பு நிதி வைக்கப்பட்ட ரசீதை, காவல்துறையினரின் பங்களிப்பாக மரணமடைந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.பின்னர் பேசிய ஐஜி முருகன், வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் மிகப்பெரிய இழப்பு என்றார்.

மேலும், அவர் ஒரு இரண்டாம் நிலைக் காவலர் என்ற அடிப்படையில் அவருக்கு மாத ஊதியம் 22,000 வழங்கப்படும், தற்போது அவரின் குடும்பத்திற்கு மாதம் 42,000 வட்டி கிடைக்கும் வகையில் தென் மண்டலத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களின் சார்பில் 86.5 லட்ச ரூபாய் தனியார் வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: