முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை உறுதிபடுத்தும் RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT - PCR பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 400 லிருந்து 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குழு மாதிரிகளுக்கு கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.700-ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம், தற்போது ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் செய்யப்பட்டதாகப் புகார் வந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.