அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் ரத்து!

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் 1 முதல் 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 1, 2019, 2:24 PM IST
அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் ரத்து!
மாதிரிப்படம்
news18
Updated: August 1, 2019, 2:24 PM IST
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் 6 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் இதர வகுப்பு மாணவர்கள் தவிர மற்றவர்களின் கல்விக்கட்டணத்தை அரசு நேரடியாக வழங்குகிறது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் 23,314 மாணவர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் மட்டுமே கல்விக்கட்டணமாக பெறப்படுகிறது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, கல்விக்கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதி மாணவர்கள் பலரும் ஆங்கில வழிக்கல்வியை பெற்று பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தகுதிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...