• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர மோடி மீதான பயமே காரணம் - தமிழிசை

எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர மோடி மீதான பயமே காரணம் - தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

மோடியை பார்த்து அச்சத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றாக சேர்ந்து வருகின்றன என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    “பிரதமர் நரேந்திர மோடி மீதான அச்சத்தின் காரணமாகவே எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கின்றனர்’’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் பாலாஜி தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கமலாலயத்தில் வரும் 15-ம் தேதி மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராவார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முடிவெடுத்து அறிவிப்பார்.

    சர்கார் பட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரைக் கூறியும், தமிழக அரசு கொண்டு வந்த இலவச திட்டங்களை அவமதிக்கும் விதமாக கொண்ட காட்சிகள் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக இந்த விவகாரத்தில் முடிவு  காணப்பட்டுள்ளது.

    ஆந்திராவிற்கு மத்திய அரசு, அம்மாநில பிரிவினையின்போது 70,000 கோடி ரூபாய் நிதியை வழங்கியது. அதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையாக பயன்படுத்தவில்லை. தனது தவறை மறைக்க தற்போது மெகா கூட்டணியை அமைத்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து கட்சித் தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எதிராக காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கெனவே பாஜகவுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று  சேர்ப்பதாகக் கூறி சந்திரபாபு நாயுடு அனைவரையும் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பால் எந்தவித மாற்றமும் ஏற்படாது. மோடியை பார்த்து அச்சத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றாக சேர்ந்து வருகின்றன என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: