• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

இந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • Last Updated :
  • Share this:
இந்திக்கு ஆதரவாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளமியுள்ளது. இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார், இந்தி மொழியை ஆதரித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
|
இதுதொடர்பாக நட்டாலம் சிவின்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் திமுக இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: