பாத்திமா லத்தீப் வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்! விசாரணைக்கு பிறகு ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு

பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியரைக் கைது செய்யவேண்டும் என்று கோரி இன்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாத்திமா லத்தீப் வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்! விசாரணைக்கு பிறகு ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு
பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியரைக் கைது செய்யவேண்டும் என்று கோரி இன்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • News18
  • Last Updated: November 14, 2019, 3:12 PM IST
  • Share this:
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐ..ஐ.டி சென்னையில் படித்த எம்.ஏ முதலாம் ஆண்டு படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியரைக் கைது செய்யவேண்டும் என்று கோரி இன்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஐடிஇந்தநிலையில், சென்னை மாவட்ட ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.ஐ.டி வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ஐ.ஐ.டி வளாகத்துக்குச் சென்ற அவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விடுதி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார். மேலும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

விஸ்வநாதன்


அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், ‘மாணவி உயிரிழந்த இடத்தைச் சென்று பார்த்தேன். உண்மையை அறிந்துகொள்வதற்கு பலரிடம் விசாரணை நடத்தினேன். இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கில் சிறப்புக் கவனம் செலுத்த கூடுதல் ஆணையாளர் தலைமையில் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.Also see:

First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading