ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
பாத்திமா லத்தீப்
  • News18 Tamil
  • Last Updated: December 15, 2019, 10:36 AM IST
  • Share this:
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.

ஃபாத்திமாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திஃப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.


மேலும் இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தலின்படி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading