• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தாயிடம் மகன் பேசியதால் தந்தை கண்டிப்பு - மனமுடைந்த மகன் தற்கொலை (வீடியோ)

தாயிடம் மகன் பேசியதால் தந்தை கண்டிப்பு - மனமுடைந்த மகன் தற்கொலை (வீடியோ)

Youtube Video

சென்னை பல்லாவரத்தில் பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் தாயிடம் பேசிய மகனை தந்தை கண்டித்துள்ளார். மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது. தவறு யார் மீது?

  • Share this:
    பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு, விட்டு சென்ற தாயிடம் பேசியதற்காக , ஆசை தந்தை திட்டியதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் அஜய். நடந்தது என்ன?

    சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் விசுவாசபுரம் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் , 42 வயதான இக்னியாஸ் சுந்தர். இவருடைய மனைவி 38 வயதான முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் 18 வயதில் சேவியர் பிரகாஷ் அஜய் என்ற மகனும் இருந்தார்.

    முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் குழந்தைகளையும், கணவரையும் பத்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார் மகனையும், மகளையும் தனியாளாக வளர்த்துள்ளார் சுந்தர். அஜய் சென்னையில் உள்ள தொழில் பயிற்சி பள்ளியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார்.

    கொரோனா காரணமாக கல்லூரி திறக்காததால் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதமாக அஜய் தனது தாயிடம் போனில் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்த தந்தை சுந்தர் , பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உங்களை தவிக்கவிட்டு சென்ற தாயிடம் பேசுகிறாயே என்று கண்டித்துள்ளார் .

    தந்தை கண்டித்ததால் அஜய் மனமுடைந்து யாருடனும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளார், மறுநாள் சனிக்கிழமை வழக்கம் போல் சுந்தர் வேலைக்கு சென்றுள்ளார். சுந்தர் மாலை வீடு திரும்பியபோது வெகுநேரம் கதவை தட்டியும் அஜய் கதவை திறக்கவில்லை.

    சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அஜய் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்,

    முதற்கட்ட விசாரணையில் தாயிடம் பேசியதற்காக, ஆசை தந்தை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க...கொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா?



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ,  அதனை மாற்ற, கீழ்காணம்எண்களுக்கு அழைக்கவும். 

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: