ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்ட தந்தையை தட்டிக்கேட்ட மகன்.. ஆத்திரத்தில் மகனையே சுட்டுக்கொன்ற தந்தை

குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்ட தந்தையை தட்டிக்கேட்ட மகன்.. ஆத்திரத்தில் மகனையே சுட்டுக்கொன்ற தந்தை

குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்ட தந்தையை தட்டிக்கேட்ட மகன்.. ஆத்திரத்தில் மகனையே சுட்டுக்கொன்ற தந்தை

குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்ட தந்தையைக் கண்டித்துள்ளார் மகன். முன்னாள் ராணுவ வீரரான தந்தை ஆத்திரத்தில் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணி தனது மகனையே துப்பாக்கியால் மார்பில் சுட்டு கொலை செய்துள்ளார். மதுபோதையில் பெற்ற மகனையே கொலை செய்தவர் சிக்கியது எப்படி?

  வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்துவருபவர் 58 வயதான சுப்பிரமணி. இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியின் மகன்கள் 28 வயதில் தினேஷ் ,25 வயதில் வினோத் மற்றும் 24 வயதில் தீபா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சுப்பிரமணி மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். செவ்வாய்கிழமை அன்று மாலை சுப்பிரமணி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மகள் தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

  தங்கையிடம் மதுபோதையில் தந்தை கெட்டவார்த்தையில் பேசிவாக்குவாதத்தில் ஈடுப்படுவதை அண்ணன் வினோத் பார்த்துள்ளார். சுப்பிரமணி பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த வினோத் தந்தையை திட்டியுள்ளார். ஒருகட்டத்தில் தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியுள்ளது.

  போதையில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது அறையில் அனுமதிபெற்று வைத்திருந்த டி.பி.எம்.எல் வகை இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வினோத்தின் மார்பை குறிபார்த்து சுப்பிரமணி சுட்டதில் வினோத் சம்பவ இடத்திலையே சுருண்டு விழுந்து பலியானார்.

  மேலும் படிக்க...பெண்ணிடம் பணம்பறிப்பு.. திருடனை பிடித்து மாஸ் காட்டிய நிஜ ஹீரோ

  சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ' isDesktop="true" id="412893" youtubeid="9DvodQV6dT8" category="tamil-nadu">

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Vellore