• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிர்ச்சி சம்பவம்! 14 வயது மகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த தந்தை - உடந்தையாக இருந்த சித்தி

அதிர்ச்சி சம்பவம்! 14 வயது மகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த தந்தை - உடந்தையாக இருந்த சித்தி

கைதான சிறுமியின் பெற்றோர்

கைதான சிறுமியின் பெற்றோர்

கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா்,  இரண்டாவது மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் வண்புணா்வுக்கு ஆளாக்கபட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
    பெற்ற தந்தையே மகளிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில் தந்தை மற்றும் உடந்தையாக இருந்த சித்தி இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை திருவொற்றியூர் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உதவியாக இருந்த இரண்டாவது மனைவியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் சோகமாக அமர்ந்து இருந்த 14 வயது சிறுமியை பார்த்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில் மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    காப்பகத்தில் உள்ளவர்கள் சிறுமிக்கு உணவு கொடுத்தனர். ஆனால் அந்த சிறுமி எதுவும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்தார். இந்த நிலையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்த குமாா் (வயது 40) இவருடைய மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டாவது மனைவி கஸ்தூரி என்பவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

    Also Read:  மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் – சிக்கிய 50 வீடியோக்கள்!

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா்,  இரண்டாவது மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் வண்புணா்வுக்கு ஆளாக்கபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவிக்கபட்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றி கொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது.  இதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்த அவரது சித்தி கஸ்தூாி (குமாரின் 'இரண்டாவது மனைவி) இருவா் மீதும் போஸ்கோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் அசோக், சென்னை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: