Home /News /tamil-nadu /

மகனின் காதலியை தந்திரமாக வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...!

மகனின் காதலியை தந்திரமாக வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...!

Youtube Video

  • News18
  • Last Updated :
    நாகை மாவட்டத்தில், மகனின் காதலியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான கருப்பு நித்யானந்தம். அமமுக கட்சியைச் சேர்ந்த கருப்பு நித்யானந்தம், துணிக்கடை மற்றும் நகைக்கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

    நித்யானந்தத்தின் மகன் 20 வயதான முகேஷ் கண்ணனும், வேதாரண்யம் காவல் எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்

    மகன் வைத்திருந்த காதலியின் படங்களைப் பார்த்த தந்தை நித்யானந்தத்திற்கு அந்த இளம்பெண் மீது ஆசை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எப்படியாவது அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என முடிவு செய்த நித்யானந்தம், மகனின் காதலை சீர்குலைக்க முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி, இளம்பெண்ணைத் தொடர்பு கொண்ட நித்யானந்தம், தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து கிராமத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதை நம்பிய அந்த பெண்ணும், 19ம் தேதி புறப்பட்டு 20ம் தேதி காலையில், தனது கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மாமனார் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என அந்த பெண் காத்திருந்த நிலையில், கடந்த 27ம் தேதி இரவு நித்யானந்தம் அவரை தனது காரில் அழைத்துச் சென்றார். தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நித்யானந்தம் அங்கு வைத்து 3 நாட்கள் பாலியல் ரீதியில் சித்ரவதை செய்துள்ளார்.

    மேலும் வியாழக்கிழமை அன்று தனது உறவினர் வீட்டிலேயே வைத்துக் கொலை செய்து விடலாம் என நித்யானந்தம் உறவினர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

    அவர்கள் பேசுவதைக் கேட்ட நித்யானந்தத்தின் கார் ஓட்டுநர் உடனடியாக வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் வெர்ஜினியாவிடம் தகவல் அளித்துள்ளார்.

    இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த கருப்பு நித்யானந்தம், இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி பவுன்ராஜவல்லி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    விசாரணையில், பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை முயற்சி சதித்திட்டம் ஆகியவற்றை குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர். இளம்பெண்ணை மீட்ட போலீசார், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    தொடர்ந்து, கருப்பு நி்தயானந்தம் மீது, பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் எதையுமே அறிந்திராத முகேஷ் கண்ணன் போலீசாரின் தகவலின் பேரில் நடந்ததைக் கேள்விப்பட்டுள்ளார், தனது காதலிக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த அவர் கதறி அழுதுள்ளார்.

    எந்த நிலையிலும் காதலியைத் தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அவர் கூறியதால், இருவரது விருப்பத்தின் பேரில், அவருக்கும் காதலிக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Nagai

    அடுத்த செய்தி