Home /News /tamil-nadu /

பெரியாரின் 141-வது பிறந்த நாள்: அரசியல்கட்சித் தலைவர்கள் மரியாதை!

பெரியாரின் 141-வது பிறந்த நாள்: அரசியல்கட்சித் தலைவர்கள் மரியாதை!

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

அண்ணா சாலையில், சிம்சன் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

  • News18
  • Last Updated :
    தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல்கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    சென்னை அண்ணா சாலையில், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது உருவபடத்திற்கு, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    முதலமைச்சர் பழனிசாமி


    அமைச்சர்கள் ஜெயக்குமார் மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சண்முகம், சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளும் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதேபோன்று, அண்ணா சாலையில், சிம்சன் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

    சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Periyar

    அடுத்த செய்தி