வசதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை

தைலமரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வசதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை
கோப்புப் படம்
  • Share this:
கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரில் வசதி வாய்ப்பு கிடைக்கும் என ஜோதிடத்தை நம்பி, பெற்ற மகளைக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வித்யா அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க செல்லும் போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் 6 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் வித்யாவின் தந்தை பன்னீர் ஜோதிடம் மாந்திரீகத்தின் நம்பிக்கையில் அவருக்கு சக்தி அதிகரிக்கவும் வசதி வாய்ப்பு வரவும் குறி சொன்ன ஒருவரின் பேச்சை கேட்டு பெற்ற மகளையே அவரது உறவினர் குமார் என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பன்னீரையும், குமாரையும் கைது செய்துள்ளனர்.


First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading