ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் கவனக்குறைவால் தந்தை உயிரிழப்பு - எஸ்.ஐ மகள் புகார்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கவனக்குறைவால் தன் தந்தை உயிரிழந்ததாக காவல் எஸ் ஐ-ன்  மகள் புகார் அளித்துள்ளார்.இது குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 57 வயதான செல்வன் இந்த ஆண்டு மே 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் தேர்தல் பணியில் இருந்த அவருக்கு ஏப்ரல் 25,ம் தேதி முதலே அவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்றின. தனியார் மருத்துவமனை, கிங் மருத்துவமனை, அண்ணா பல்கலை கொரோனா பராமரிப்பு மையம் ஆகியவற்றில் ஏற்கெனவே சிகிச்சைப் பெற்று உடல் நிலை சீராகாததால் மே 5ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

செல்வனுக்கு ஆர் டி பி சி ஆர் நெகடிவ் என்றாலும் கொரோனா நுரையீரல் பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 9ம் தேதி அவர் உடல்நிலை மோசமாகவே, அவர் தங்கியிருந்த வார்டிலிருந்து ஐசியுவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் யாரும் உடன் இல்லாததாலும்  ஆக்சிஜன் வசதி இல்லாததாலும் அவரை ஐசியுவுக்கு மாற்ற முடியாமல் போனது என செல்வனின் மகள் டாலியா ஷெரின் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தான் தனது தந்தையின் நிலைமை மோசமாகியது என்றும் கூறுகிறார்.

Also Read : 16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்த பாஜக பிரமுகர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மே மாதம் 11ம் தேதி தனது தந்தை ஆக்சிஜன் வசதியுடன் சுவாசித்து வந்ததாக கூறுகிறார். அவரை ஐசியுவுக்கு மாற்ற மருத்துவர்கள் மறுத்து விட்டதாகவும் மருத்துவர் வந்த போது உதவியாளர்கள் யாரும் உடன் இருக்கக் கூடாது என தங்களை வெளியே அனுப்பியதாகவும் கூறுகிறார். அதன் பின் பத்து நிமிடங்கள் கழித்து சுகாதார பணியாளர் ஒருவர் தன் தந்தை படுக்கையிலிருந்து கீழே விழுந்து கிடந்ததாக தெரிவித்ததாகவும் கூறுகிறார். உள்ளே சென்று கீழே இருந்த தன் தந்தையை தூக்கி படுக்கையில் வைக்கும் போது அவர் உயிர் பிரிந்ததாகவும் ஷெரின் கூறுகிறார்.

Also Read : அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.84 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல்... சென்னையில் பரபரப்பு

அந்த நேரத்தில் உதவி என்று அழைத்த போதும் மருத்துவர்கள் செவிலியர்கள் வரவில்லை என்றார். ஆங்காங்கே ரத்த கறைகள் அவர் உடம்பில் இருந்ததாகவும் சந்தேகம் ஏற்படும் வகையில் சில காயங்கள் இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் அவரது ஆக்சிஜன் குழாய் கழற்றி எடுத்து ஓரமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார். எனவே மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் மட்டுமே தன் தந்தை உயிரிழந்ததாகவும் அவருக்கு வேறு எந்த இணை நோய்களும் இல்லை எனவும் கூறினார்.

இது குறித்து முதல்வர் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை செயலர், சுகாதாரத்துறை அமைச்சர், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் internal medicine இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குழு விசாரணையை மேற்கொள்ளும் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: