கண்முன்னே 2 குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் தாளாமல் தந்தை தற்கொலை!

கண்முன்னே 2 குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் தாளாமல் தந்தை தற்கொலை!

கண்முன்னே 2 குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், இவருக்கும் ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

  இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8), ஹரி ப்ரீத்தா (வயது 6) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் லோகேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில், மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

  இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கைலாசகிரி மலையில் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

  அப்போது அங்குள்ள குளத்தில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக திடீரென இரண்டு குழந்தைகளும் குளத்தில் நீரில் மூழ்கியுள்ளனர்.

  இதனை பார்த்த தந்தை லோகேஸ்வரன் அவர்களை காப்பாற்ற முயன்றுளார், எனினும் இரு குழந்தைகளும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

  Also read: தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

  இந்தசம்பவம் குறித்து போலீசாருக்கு லோகேஸ்வரன் தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அங்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மலை மீது சென்று குளத்தில் மூழ்கி கிடந்த இரண்டு குழந்தைகளை சடலமாக மீட்டனர்.

  பின்னர், மலைப்பகுதியில் இருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால், காவல் உதவி ஆய்வாளர், ஹரி சிறுமியின் உடலை தோளில் சுமந்த படி கொண்டு சென்றார். சிறுவனின் சடலத்தை மற்ற காவலர்கள் டோலி கட்டி தூக்கி சென்று, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதனிடையே, குழந்தைகளின் உடல்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டன. வெளியே லோகேஸ்வரனும், மீனாட்சியும் இரவு முழுவதும் அழுதபடியே குழந்தைகளின் உடல்களை வாங்கக் காத்திருந்தனர்.

  இதற்கிடையே, இன்று காலை தம்பதி இருவரும் ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அதில் பூச்சி மருந்தைக் கலக்கிய லோகேஸ்வரன், முதலில் குடித்தார். அதன்பிறகு மீனாட்சி குடிக்க முயன்றபோது அதை லோகேஸ்வரனே தட்டிவிட்டார்.

  இதைக் கண்ட மீனாட்சி அலறித் துடித்தார். அருகில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் அங்கு ஓடி வந்து லோகேஸ்வரனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதைக்கண்ட மீனாட்சி, குழந்தைகள் சென்ற இடத்துக்கே நீங்களும் சென்றுவீட்டார்களா? எனக்கூறி கதறி அழுதார்.

  இது குறித்து ஆம்பூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மற்றும் 2 குழந்தைகளைப் பறிகொடுத்த மீனாட்சியை அவரது உறவினர்கள் மீட்டு, வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: