காதல் திருமணம் செய்த மகளை மயக்க மருந்துகொடுத்து கடத்திய முன்னாள் போலீஸ்!

சாதி வெறியில் சொந்த மகளையே கொல்ல முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த மகளை மயக்க மருந்துகொடுத்து கடத்திய முன்னாள் போலீஸ்!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: February 1, 2020, 6:36 PM IST
  • Share this:
காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் சொந்த மகளை விஷம் கொடுத்து கொலை செய்ய வந்த தந்தையைத்  தடுக்க முயன்ற மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட மூவரை மயக்க மருந்து அடித்து முகத்தை சிதைத்த ஓய்வு பெற்ற காவலர் உள்ளிட்ட கூலிப்படையினர் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு டன்லப் நகர் பகுதியில் வசிப்பவர் பாலாஜி. இவரது மகன் சாய்குமார். சென்னை கோயம்பேட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏசி மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் பாலகுமாரன் என்பவரின் மகள் தீபிகாவிற்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து வேப்பம்பட்டில் வசித்து வந்தனர். காதல் திருமணம் செய்த தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அதே வீட்டில் தீபிகாவின் மைத்துனர் ஜெயகுமாரின் மனைவி திவ்யாவும் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.


இந்நிலையில் வீட்டில் இருந்த பூசாரி பாலாஜி அவரது மகன்கள் ஜெயக்குமார், சாய் குமார் ஆகிய மூவரும் வேலைக்குச் சென்றிருப்பதை அறிந்து கொண்டு இரவு திடீரென நுழைந்த தீபிகாவின் தந்தையும் ஓய்வு பெற்ற காவலருமான பாலகுமார் தீபிகாவை அழைத்துச் செல்ல வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பின் அங்கிருந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். திடீரென 4 ரவுடிகளுடன் ஓய்வு பெற்ற காவலர் பாலகுமார் பூச்சி மருந்து விஷத்தை கொடுத்து கர்ப்பிணியாக இருந்த தனது மகள் தீபிகாவை கொல்ல முயன்றார். அப்போது அவரைத் தடுக்க முயன்ற மாமியார் மற்றும் கர்ப்பிணியாக இருந்த மற்றொரு மருமகள் திவ்யா இருவருக்கும்   முகத்தில் மயக்கம்-மருந்து தெளித்ததால் மயங்கிச் சரிந்தனர். அதில் ரசாயணம் கலக்கப்பட்டிருந்ததால் இருவரின் முகமும் சிதைந்தது.

தனது மகள் கர்ப்பிணியாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் அடித்து உதைத்து தீபிகாவை ஸ்ரீபெரும்புதூருக்கு தூக்கி சென்றார். இரு குடும்பமும் சென்னை ஓட்டேரியில் அருகருகே வசித்தபோது சிறுவயதிலிருந்தே சாய்குமார் மற்றும்  தீபிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதல்  ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு பாலகுமாரன் தனது மகளை திருப்பதியில் உள்ள விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார்.இருப்பினும் காதலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் வரை சென்று தற்போது 5 மாத கர்ப்பிணியாக  தீபிகா உள்ளார். சாதி வெறியில் சொந்த மகளையே கொல்ல முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது படுகாயமடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்