சித்தர்கள் மற்றும் சாமியாடிகளின் மீது அதீத நம்பிக்கை - உயிரிழந்த தந்தையின் உடலை வீட்டிலேயே அடக்கம் செய்த மகன்

பெரம்பலூர் அருகே தந்தையின் சடலத்தை வீட்டிற்குள்ளேயே வைத்து, மகன் அறை எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான ராமசாமி. 60 வயதான அஞ்சலம் தம்பதியினர். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில், மூன்று மகன்களில் மூத்த மகன் கந்தசாமி உடல்நலக் குறைவினால் இறந்து விட்டார்,

கடைசி மகன் அழகேசன் மனநலம் பாதிக்கப்பட்டு எங்கு சென்றார் என தெரியாமல் உள்ளார். தம்பதியின் இரண்டாவது மகன் பாலகிருஷ்ணன் தனது மனைவி தனலட்சுமியை பிரிந்து குழந்தைகள் உடன் ஈரோட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

ராமசாமியும், அஞ்சலமும் களரம்பட்டியில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் முதுமையின் காரணமாக ராமசாமி திங்கட்கிழமை காலை உயிரிழந்தார்.


தகவல் அறிந்து ஈரோட்டில் இருந்து இரு சக்கர வாகனம் மூலம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பாலகிருஷ்ணன் சென்றார். தந்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள வெற்றிடத்தில் அடக்கம் செய்வதற்காக குழி தோண்டியுள்ளார்.

இதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்பு பகுதியில்சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது எனக்கூறியுள்ளனர். இடுகாட்டில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து சடலத்தை வீட்டிற்குள் பாலகிருஷ்ணன் எடுத்துச்சென்றுள்ளார்.ஜீவ சமாதி அடைந்தது போல் தந்தை ராமசாமியின் சடலத்தை அமர்ந்த நிலையில் வைத்து, உடல் முழுவதும் திருநீரு கொட்டி, சிறிய அறை ஒன்றை எழுப்பி மூடிவிட்டார். சித்தர்கள் மற்றும் சாமியாடிகளின் மீது அதீத நம்பிக்கை கொண்ட பாலகிருஷ்ணன், தந்தை இறப்பதற்கு முன்பு, உடலை வீட்டிலேயே அடக்கம் செய்யச் சொன்னதால் அப்படி செய்ததாகக் கூறினார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே காட்டு தீ போல் பரவியது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் நகர போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடலை புதைத்த இடத்திற்கு சென்றனர். பாலகிருஷ்ணனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த பாலகிருஷ்ணன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ALSO RED |  நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் விரக்தி - மருத்துவர் கனவில் இருந்த மாணவி தற்கொலை

இதனால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பிள்ளைகளை இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் அமர வைத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் ராமசாமியின் உடலை வைத்து எழுப்பப்பட்ட அறையை உடைத்து உள்ளே இருந்த ராமசாமியின் சடலத்தை எடுத்த அதிகாரிகள், வாகனம் மூலமாக அதே ஊரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

முதியவரின் சடலத்தை வீட்டில் புதைத்த விவகாரத்தில் களரம்பட்டியில் திங்கட்கிழமை துவங்கிய களேபரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல்தான் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பாலகிருஷ்ணன் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து கொண்டே இருந்தார்.

இதனால் வேறு ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்திடக்கூடாது என்பதற்காக பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading