கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்
உயிரிழந்த தந்தை மகன்.
  • News18
  • Last Updated: June 27, 2020, 1:53 PM IST
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்கு மரக்கடை நடத்தி வரும் நிலையில், இவரின் மகன் பென்னிக்ஸ் (31) செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை வைத்திருந்ததாக கூறி போலீசார், ஜெயராஜை திட்டியுள்ளார்.

இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ்க்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த போலீசாரிடம் சமதான பேச முயன்ற போது, அது கைகலப்பு வரையிலும் சென்றதாக  கூறப்படுகிறது.

இதையெடுத்து போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன் பின்னர் இருவரையும் 21-ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில், நேற்று 22-ம் தேதி இரவில் திடீரென பென்னிக்ஸ் தனக்கு அதிமாக வியர்வை வருவதாக கூறியவாறு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு பின்புறமுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இல்லமால் பென்னிக்ஸ் உயிரிழந்தார். இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பெனிக்கஸ் தந்தை ஜெயராஜீக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பதாக கூறி அவரையும் போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் இன்று காலையில் ஜெயராஜ் சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்தார். இவரது உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் இருவரின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இருவரது சொந்த ஊரான சாத்தான்குளத்தில் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அங்குள்ள காமராஜர் சிலை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை  போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி ஜெ.எம்1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading