முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி : தந்தை மகன் கைது

சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி : தந்தை மகன் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சேலம் அழகாபுரம் அருகே நகரமலை பகுதியைச் சேர்ந்த, நாகராஜ், தனது மகன் வெங்கடேஷ், மகள் ரேவதி, மருமகன் அசோக்குமார் ஆகியோருடன் இணைந்து செவ்வாய்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் ஆர்.கே. என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தார். 60,000 ரூபாய் கொடுத்தால் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்; 10,000 ரூபாய் கொடுத்தால், மோட்டார் சைக்கிள், குறைந்த அளவு பணம் கட்டினால் தங்கம், வெள்ளி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதையடுத்து, சேலம், நாமக்கல் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். ஆனால், அறிவித்தபடி கார் உள்ளிட்டவற்றை 6 ஆண்டுகளாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்மூலம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றதாக 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க... Sexual harassment charge | பாலியல் புகாருக்கு உள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட்

இதையடுத்து, நாகராஜ், வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரேவதி, அவரது கணவர் அசோக் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். பணம் கேட்டவர்களை ரவுடிகள் மூலம் மிரட்டுவதாக புகார் அளித்தவர்கள் தெரிவித்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Cheating case, Crime | குற்றச் செய்திகள், Salem