ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆட்டோ ஓட்டுநர்கள் Fastag பயன்படுத்த வேண்டுமா?

ஆட்டோ ஓட்டுநர்கள் Fastag பயன்படுத்த வேண்டுமா?

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாநில நெடுஞ்சாலைகளில் ஆட்டோக்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் பாஸ்டாக் எடுக்க வேண்டுமா என்ற கேள்வியை ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வைக்கின்றனர்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு  வருகிறது. இந்நிலையில், ஆட்டோக்களுக்கும் ஃபாஸ்டேக் அவசியமா என்பது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  ஃபாஸ்டேக் முறை மாநில நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டிற்கு வரும் திட்டம் தற்போது இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆட்டோக்களுக்கு சுங்க வரிகள் இல்லை என்பதால் அவர்கள் பாஸ்டேக் பயன்படுத்த தேவை இல்லை எனவும், அதேபோல ஆட்டோக்களுக்கு எப்பொழுதும் பெறக்கூடிய கட்டணங்கள் வழக்கம்போல வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

எனவே ஆட்டோ வைத்திருக்கக்கூடிய ஓட்டுநர்கள் பாஸ்டாக் பயன்படுத்த தேவையில்லை.

மேலும் ஈசிஆர், ஓஎம்ஆர் ஆகிய பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பயணிப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் மாதாந்திர கட்டணத்தை செலுத்தி பயணம் செய்வதாகவும், அதேபோல சுங்கச்சாவடிகளை சுற்றியிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்குவதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஆட்டோ ஓட்டுனர்களால் ஏற்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Chennai, Fastag, Toll gate