Home /News /tamil-nadu /

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை.. அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல்

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை.. அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல்

டோல்கேட்

டோல்கேட்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அனைத்து வாகனங்களும் ஃபாஸ்டேக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 2 முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்தயஅரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15ம் தேதி வரைகால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது.

    ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம். தற்போது 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

    மேலும் படிக்க...சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு

    ஃபாஸ்டேக் முறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஃபாஸ்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்ய முற்பட்டால் அதன் சர்வர் செயல்படாமல் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். சர்வர் செயல்படவில்லை எனக் கூறினால் கூட அதனை ஏற்காத சுங்கச்சாவடி ஊழியர்கள் இருமடங்கு கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக புகார் கூறுகின்றனர்.

    மேலும் டோல்கேட் ஊழியர்கள் மரியாதையாக பேசுவதில்லை என்றும், ஃபாஸ்டேக் சர்வர் செயல்படாத குற்றச்சாட்டுக்கு உரிய பதில் அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள். வாடகைக்கு வாகனம் ஓட்டுபவர்கள், இதுபோன்ற சூழலில் இருமடங்கு பணத்தை எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்ற குறைபாடுகளை அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Fastag, Toll gate

    அடுத்த செய்தி