டிஏபி விலை உயர்வால் கவலையில் விவசாயிகள் - திரும்பப் பெற விஜயகாந்த் வலியுறுத்தல்

டிஏபி விலை உயர்வால் கவலையில் விவசாயிகள் - திரும்பப் பெற விஜயகாந்த் வலியுறுத்தல்

வேளாண் பணிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உரமான, டிஏபி-யின் விலை உயர்வால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேளாண் பணிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உரமான, டிஏபி-யின் விலை உயர்வால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  விவசாய பணிகளில் செயற்கை உரங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கூட்டு உரங்களில் டிஏபி உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 50 கிலோ எடை கொண்ட ஒரு டிஏபி மூட்டை, அதிகபட்சமாக ரூபாய் 1,400 வரை விற்கப்பட்டு வந்தது.

  இந்த சூழலில், உர உற்பத்தியாளர்களே அவற்றின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், உர உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பான இப்கோ, டிஏபியின் விலையை 500-ல் இருந்து 700 ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இது, விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ள, தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வால், ஒரு ஏக்கருக்கு ரூபாய் 1,200 வரையில் கூடுதல் செலவாகும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்,

  இந்த விலை உயர்வை தொடர்ந்து, யூரியா, பொட்டாஷ் போன்ற கூட்டு உரங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். உரத்துறைக்கு மத்திய அரசு, மானியங்களை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  உற்பத்தி பொருட்களுக்கான அடிப்படை ஆதார விலையில் தொடரும் சிக்கலால், ஏற்கனவே போதிய வருமானமின்றி தவித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உர விலை அதிகரிப்பு தங்களுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


  இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உரம் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஓவ்வொரு விவசாயியையும் காக்க வேண்டியது நம் நாட்டின் கடமை. அதை கருத்தில் கொண்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, உரம் விலையை திரும்பபெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: