கஜா புயலால் தென்னை மரங்கள் வீழ்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அகற்ற தொழிலாளர்கள் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வதன்று தெரியாமல் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தவிக்கின்றனர்.
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 46 லட்சம் தென்னை மரங்கள் முற்றிலும் வேரோடு சாய்ந்து விளைநிலங்களில் விழுந்தன.
குறிப்பாக, ஒரத்தநாடு, குருமண்தெரு, தெலுங்கன்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ள நிலையில் அதனை அகற்ற இயந்திரங்கள் கிடைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தென்னை மரங்கள் விளை நிலங்களேயே கிடக்கின்றன.
இதனால் ஓலைகள் அழுகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மரங்களை அகற்றினால் மட்டுமே மீண்டும் விவசாயப் பணிகளை தொடங்க முடியும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கஜா புயலால் முறிந்த மரங்கள்
தமிழக அரசு வழங்கியுள்ள மரம் அகற்றும் இயந்திரங்கள் கிடைக்காமல் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து மரங்களை சில விவசாயிகள் அகற்றி வருகின்றனர்.
மரம் அகற்ற வரும் கூலி தொழிலாளிகள் ஒரு நாளைக்கு ஆயிரம் வரை கூலி கேட்பதாகவும், அவர்களை விட்டால் மரங்களை வேறு வழியில்லை என்றும் விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள், தென்னை மரங்களை அகற்றவதற்கே பல லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை தமிழக அரசே போர்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் அளித்தால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
Also See... நியாயமாக இருப்பது தவறா..! சீறும் பொன்.மாணிக்கவேல்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.