கோவில்பட்டி அருகே பலத்த காற்று: காய்கறி பந்தல், வீடுகள் சேதம்

கோவில்பட்டி அருகே பலத்த காற்று: காய்கறி பந்தல், வீடுகள் சேதம்

கோப்புப்படம்.

கோவில்பட்டி அருகே பலத்த காற்று வீசியதால் காய்கறி பந்தல் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதன் மூலம் லட்சக் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 25 நிமிடங்கள் மழை பெய்த நிலையில், கோவில்பட்டி அருகேயுள்ள புளியங்குளம் லெட்சுமிபுரத்தில் ராஜாராம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் அமைத்திருந்த புடலை, சுரைக்காய் மற்றும் பாகற்காய் பந்தல் பலத்த சேதமடைந்தது. பந்தல் அமைந்திருந்த கல் தூண்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் என அனைத்தும் சேதமடைந்தன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயி ராஜாராம் கூறும்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக தவித்து வந்தேன். தற்பொழுது காற்றினால் தோட்டம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அரசு உதவி செய்தால் மட்டுமே இனி விவசாயம் செய்ய முடியும் என்கிறார். இதே போன்று வெங்கடாசலபுரத்தில் சூறைக்காற்றுக்கு அங்குள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் மாட்டுக்கொட்டகை ஆகிய சேதமடைந்தன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published: