• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாயம்! திண்டுக்கல் கிராமங்களில் பரிதாபம்

காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாயம்! திண்டுக்கல் கிராமங்களில் பரிதாபம்

விவசாயி (கோப்புப்படம்)

விவசாயி (கோப்புப்படம்)

திண்டுகலில் விவசாயிகள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களை வேளாண் துறை அதிகாரிகள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீரை விலைக்கு வாங்கி பாசனம் செய்வதாக  விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காத நிலையில், விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் நிலை இன்னும் மோசமாகதான் உள்ளது. வேடச்சந்தூர் தாலுகாவில் முக்கிய நீராதாரமாக விளங்கும் அழகாபுரி அணை முற்றிலும் வறண்டு காணப்படுவதால் மலைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. இருப்பினும், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள், செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலிக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், மிளகாய், முருங்கை ஆகியவற்றை பயிர் செய்துள்ளனர்.

சாகுபடி செய்த பயிர்களில் இருந்து எப்படியாவது விளைபொருட்களை எடுத்து விட வேண்டும் என தவித்து வரும் அவர்கள் வறட்சியை சமாளிப்பதற்காக தண்ணீரை பல ஆயிரம் விலை கொடுத்து வாங்கி தங்களது நிலங்களில் பாசனம் செய்கின்றனர்.

விவசாயி தங்கம்மா கூறுகையில் போதிய மழையில்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால், விவசாயத்தை கைவிட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

விவசாயி சண்முகம் கூறிகையில், விவசாயிகள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களை வேளாண் துறை அதிகாரிகள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Also see... நாளிதழ்களில் இன்றைய செய்திகளின் தொகுப்பு! (21.02.18) 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: