பயிர்களை சேதப்படுத்தி அமைக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள்... இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்...!

பயிர்களை சேதப்படுத்தி அமைக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள்... இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்...!
  • News18
  • Last Updated: February 3, 2020, 8:46 AM IST
  • Share this:
ராமநாதபுரம் அருகே விவசாய நிலத்தில் எந்தவித அறிவிப்பு இல்லாமல் கேஸ் எரிவாயு குழாய்கள் பதிக்க முற்பட்ட இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், வாலாந்தரவை பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச்செல்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களில் அனுமதியின்றி எந்த வித அறிவிப்பும் இல்லாமல் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கடலை, மிளகாய், பனை உள்ளிட்ட பயிர்களை அழித்து எரிவாயு குழாய்கள் பதிக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட முயன்ற இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்