கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சிக்கு உட்பட்ட 136 ஏக்கர் பரப்பளவுள்ள கொண்ட ஏரியில் கடந்த ஆண்டு முதல் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி பெருமுளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஏரிகளுக்கு நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வந்ததால் விவசாயிகள், கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலன் அடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் பெருமுளை ஏரியில் மீன்பிடிக்க பொதுபணிதுறை அதிகாரிகள் குத்தைக்கு விடுத்துள்ளனர். குத்தைகைக்கு எடுத்த மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன் பிடிப்பதற்காக ஏரியில் உள்ள தண்ணீர் மதகை இரவோடு இரவாக உடைத்து நான்கு பகுதிகளிலும் திறந்துவிட்டள்ளனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து நாசமாக்கியுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏரியில் இருந்து நீரை திறந்துவிட்ட குத்தகைத்தார்ர்களைக் கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் பொதுபணிதுறை அதிகாரிகளைக் கண்டித்தும் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் விட்டீர்களா அல்லது மீன் பிடிப்பதற்காக தண்ணீர் விட்டீர்களா என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வந்து நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.