• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு! ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு! ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி

விவசாயிகள் போராட்டம்(மாதிரிப் படம்)

விவசாயிகள் போராட்டம்(மாதிரிப் படம்)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, பேரணியாக சென்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில், விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் அவுரித் திடலில் இருந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக புறப்பட்டனர். தடையை மீறி நடைபெற்ற இந்தப் பேரணியில், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களை ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: