• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்யும் திட்டம் - விவசாயிகள் எதிர்ப்பு

மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்யும் திட்டம் - விவசாயிகள் எதிர்ப்பு

Youtube Video

மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் 2,113 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒருசில நிலையங்களில், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக, அக்டோபர் 1-ம் தேதி முதல், மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், சாகுபடி செய்யப்படும் நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஆன்ட்ராய்டு போன் மூலமாகவே பதிவு செய்யலாம் என்றும், அதன்பிறகு நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கான தேதி, விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்யும் திட்டம் அமலுக்கு வந்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விளை நிலத்தில் அறுவடை செய்த நெல்மணிகளை, வீட்டுக்கு எடுத்து சென்று பராமரிப்பது மிகவும் கடினம் என்றும், நெல் உற்பத்தி அதிகம் இருக்கும் பகுதிகளில் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இத்திட்டத்தால், மீண்டும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறும் விவசாயிகள், நெல் கொள்முதலுக்கான நடைமுறையை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அனைவரிடமும் ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இருக்காது என்பதாலும், பலருக்கு ஆண்ட்ராய்டு போன்களை இயக்கத் தெரியாது என்பதாலும் நெல் கொள்முதலில் வழக்கமான நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்பது பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கைவைத்துள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, காலதாமதத்தை தடுக்கவே மின்னணு முறையில் நெல்கொள்முதல் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஆன்ட்ராய்டு ஃபோன்களை பயன்படுத்த தெரியாத விவசாயிகள், அருகே உள்ள கணினி மையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: