Home /News /tamil-nadu /

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் விவசாயிகள் அதிர்ச்சி!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் விவசாயிகள் அதிர்ச்சி!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து நிலத்தில் பரவிய கச்சா எண்ணை

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து நிலத்தில் பரவிய கச்சா எண்ணை

சுமார் 2 ஏக்கர்  நிலத்தில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதால் பருத்தி சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பெடுத்து விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்து வருகிறது.

எருக்காட்டூரில் 7 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் வெள்ளக்குடியில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் கீழஎருக்காட்டூரில் உள்ள செல்வராஜ் என்பவரின் 11 ஏக்கர் விவசாய நிலத்தின் வழியாக செல்லும் ஓஎன்ஜிசி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் விளைநிலங்களில் பரவியது.

சுமார் 2 ஏக்கர்  நிலத்தில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதால் பருத்தி சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அடிக்கடி நிகழும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Farmers, ONGC, ONGC Gas, Thiruvarur

அடுத்த செய்தி