குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடேயே மோதல்! சமாதானம் செய்த ஆட்சியர்

Web Desk | news18
Updated: July 31, 2019, 6:49 AM IST
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடேயே மோதல்! சமாதானம் செய்த ஆட்சியர்
Web Desk | news18
Updated: July 31, 2019, 6:49 AM IST
சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட, அவர்களை ஆட்சியர் சமாதானப்படுத்தினார்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் ஜெயக்காந்தன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு தொகை உரிய முறைப்படி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினர். அப்போது அதிகாரி ஒருவர், குறிப்பிட்ட விவசாயிகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தகவல் தெரியும் எனக்கூறவே, மற்ற விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் குழுவாக பிரிந்து சண்டை போடத் தொடங்கினர். அங்கு போடப்பட்டிருந்த சேர்களை தூக்கி எறிந்தனர். உடனே இருக்கையில் இருந்து கீழே இறங்கி வைந்த ஆட்சியர் ஜெயகாந்தன், விவசாயிகளை சமாதானம் செய்தார். அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.


 
First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...