உரத் தட்டுப்பாடு, உரப் பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தி காங்கிரஸார் குட்டிக்கரணம் அடித்து போராட்டம்

உரத் தட்டுப்பாடு, உரப் பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தி காங்கிரஸார் குட்டிக்கரணம் அடித்து போராட்டம்

உரத் தட்டுப்பாட்டையும் உரப் பதுக்கலையும் தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் குட்டிக்கரணம் அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரத் தட்டுப்பாட்டையும் உரப் பதுக்கலையும் தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் குட்டிக்கரணம் அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் மானாவாரி விவசாய நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். விதைகளின் விலை உயர்வு, நவதானியங்களுக்கு போதிய விலையின்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், தற்பொழுது உரத் தட்டுப்பாடு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக செயற்கையாக உரத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், உரங்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனைக்கு வழங்காத காரணத்தினால் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Also read: சென்னை மெரினாவில் பனை மர விதைகளை நட்ட புதுமணத் தம்பதி

உரத் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உரங்களை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான முறையில் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி உர விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடைய கோரிக்கையை அரசு செவியேற்கச் செய்யும் நோக்கில், குட்டிக்கரணம் அடித்தும், தலைகீழாக நின்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர். காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டத்தினால் சிறிது நேரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உரத் தட்டுப்பாடு விவசாயிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. மூன்று மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருப்பதால் உரத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ‌தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேறவில்லையென்றால் வரும் 22ம் தேதி மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் வழக்கறிஞர் அய்யலுசாமி தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: