விளைநிலங்களில் மின் கோபுரம்: போலீஸ் துணையுடன் நில அளவீட்டுப் பணியில் அதிகாரிகள்!

கோவை மாவட்டம் கிணத்துகடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர், மெட்டுவாவி, காட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் துணையுடன் நில அளவீடு செய்யும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

news18
Updated: January 11, 2019, 1:43 PM IST
விளைநிலங்களில் மின் கோபுரம்: போலீஸ் துணையுடன் நில அளவீட்டுப் பணியில் அதிகாரிகள்!
கோப்புப் படம்
news18
Updated: January 11, 2019, 1:43 PM IST
கோவை மாவட்ட விளைநிலங்களில் மின் கோபுரம் அமைப்பதற்காக போலீஸ் துணையுடன் அதிகாரிகள் அளவீட்டுப் பணியில் அத்துமீறி ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின்சார விநியோகத்துக்காக தமிழகத்தில் மொத்தம் 8 இடங்களில் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திட்டத்துக்காக கோவை மாவட்டம் கிணத்துகடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர், மெட்டுவாவி, காட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் துணையுடன் நில அளவீடு செய்யும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் எதிர்ப்பு வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் வருவாய்த்துறையினர் அத்துமீறி அளவீட்டுப் பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

வடசித்தூர் பகுதியில் தொடங்கிய இந்த பணி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.  அளவீடு செய்யும் இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also see...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...