மேட்டூர் அணை நீர் திறப்பு! விவசாயிகளின் இரண்டு கோரிக்கைகள்

காவிரியை வரவேற்கத் தயாராகியுள்ள கடைமடை விவசாயிகள் தங்கள் பகுதிக்கு நீர் தடையின்றி வருவதற்கும், குளம் குட்டைகளை காவிரி நீரால் நிரப்புவதற்கும் அரசு வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 8:13 PM IST
மேட்டூர் அணை நீர் திறப்பு! விவசாயிகளின் இரண்டு கோரிக்கைகள்
மேட்டூர் அணைத் திறப்பு
Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 8:13 PM IST
மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரை பயிர் சாகுபடி செய்யாமல், நீரை சேமித்து வைக்கவேண்டும் என ஒரு தரப்பும், குடிமராமத்து பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென மற்றோர் தரப்பினரும் கோரிக்கை விடுத்துளனர்.

கர்நாடக மாநிலம் மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வார மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் 90 விழுக்காடு நிரம்பி விட்டன. அதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றிரவு நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இன்று, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனதுக்காக தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவிட்டார்.

காவிரியை வரவேற்கத் தயாராகியுள்ள கடைமடை விவசாயிகள் தங்கள் பகுதிக்கு நீர் தடையின்றி வருவதற்கும், குளம் குட்டைகளை காவிரி நீரால் நிரப்புவதற்கும் அரசு வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயலில் வரப்புகளின் உயரத்தை அதிகரித்தால் நீரை உள்வாங்கி சேமிக்கும் அமைப்புகளாக வயல்கள் மாறிவிடும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இம்முறை சாகுபடி செய்யாமல் நிலத்தடி நீரை செறிவூட்டவேண்டும் எனக்கூறும் சில விவசாயிகள், மனது வைத்தால் ஒவ்வோர் விவசாயியும், தங்கள் வயலில் சிறு கல்லணையை கட்டலாம் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தங்கு தடையின்றி சிந்தாமல், சிதறாமல் வந்தடைய வேண்டும் என்பதே கடைமடை வரை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...