நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்குமா? - எதிர்பார்ப்போடு சாகுபடி பணியில் விவசாயிகள்

மாதிரிப்படம்

நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்குமா எனும் ஏக்கத்துடன் எதிர்பார்ப்போடு சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு, ஜுன் 12ம் தேதி நடப்பாண்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும் மகிழ்சியடைந்துள்ள விவசாயிகள், உற்சாகத்துடன் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில்,  தரமான விதை, உரம், இடு பொருட்கள், வேலையாட்களின் சம்பள உயர்வு உள்ளிட்டை சாகுபடிக்கான செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப, நெல் கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற விவசாயிகள் கோரிக்கையும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டாலுக்கு ₹ 53 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால்  ₹ 1,868 என்று  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோவிற்கு 53 காசுகள் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோவிற்கு 65 காசுகள் உயர்த்திய நிலையில் தற்போது அதைவிடக் குறைவாக உயர்த்தியுள்ளது. விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் வடுவூர் கார்த்திகேயன் கூறுகையில், ஒரு குவிண்டால் நெல்  உற்பத்திக்கு சாகுபடி & இதர செலவினம் என சுமார்  ₹ 4 ஆயிரம் வரை செலவாகிறது. அதில் பாதி தொகையான ₹ 2 ஆயிரம் கூட கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கம் விலை, அரசு ஊழியர், வங்கி அதிகாரி ஊதியம் இவற்றோடு ஒப்பீடு செய்தால்,  தற்போது நெல்லுக்கு மிக சொற்ப அளவே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்கிறார்.

எனவே, மத்திய அரசு நெல் விலையை மறு பரிசீலனை செய்து, உயர்த்தி அறிவிக்க வேண்டும். மத்திய அரசு குறைவாக விலை உயர்த்தியிருந்தாலும் மாநில அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க நிர்வாகி தீட்சிதர் பாலு, திருச்சி ஹேமநாதன் ஆகியோர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளை பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவை விட 50% கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பருவ நிலை மாற்றம், இயற்கைப் பேரிடர், பூச்சி, நோய்த் தாக்குதல் எனப் பல்வேறு இடர்களைக் கடந்தும் விவசாயம் லாபகரமான தொழில்தான் என்கிறார்கள் விவசாயிகளின்.

Also read: முதலமைச்சரின் தனிச் செயலர் கொரோனாவால் மரணம் - மு.க. ஸ்டாலின் இரங்கல்
Published by:Rizwan
First published: