• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி 18 சதமாக உயர்த்தியை திரும்ப பெறவேண்டும் - தென்னை விவசாயிகள் கோரிக்கை

தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி 18 சதமாக உயர்த்தியை திரும்ப பெறவேண்டும் - தென்னை விவசாயிகள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று கொங்கு மண்டல தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    கடந்த 17-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி பொருளான தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முயற்சி பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோயில்கள், ஹோட்டல்கள் சரிவர இயங்காததால் தேங்காய் தேக்கமடைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 25 ரூபாய்க்கு மேல் விற்பனையான தேங்காய் தற்போது 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    அதேபோல், கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 150 ரூபாய் உயர்த்தி தர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கும் மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. இந்நிலையில், தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரி விதித்தால், தேங்காய் எண்ணெய் விலை பல மடங்கு உயரும் என்றும் சாதாரண மக்கள் தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தென்னை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பாமாயிலின் அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால், பாமாயில் எண்ணையை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவார்கள் என்றும் தேங்காய் எண்ணையை வாங்க முன்வர மாட்டார்கள் என்றும் விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணைக்கு 18 சதவீத வரி விதிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும் மத்திய அரசு இந்த முயற்சியை கை விடவில்லை என்றால் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: