அனைத்து விவசாய சங்கங்களும் வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றன - கே.எஸ்.அழகிரி பேச்சு

அனைத்து விவசாய சங்கங்களும் வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றன - கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றால் மூன்று வேளாண் சட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

  • Share this:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்பிக்கள் வில்சன், கலாநிதி வீராசாமி, திமுக எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் திமுக தோழமைக் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் போராடுகிறார்கள். இதற்கு அரசியல் பின்புலம் கிடையாது. விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். இந்த 3 வேளாண் சட்டங்களும்  தவறானவை. ஏற்கனவே இருக்கும் நடைமுறை சிறப்பாக இருக்கிறது. இந்தச் சட்டம் தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயார் என்றார்.

Also read: ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன?



மாநில அரசு செய்யும் தவறு மாநில உரிமைகளைவிட்டுக் கொடுப்பதுதான் என்று கூறிய அவர், தமிழகத்தில் திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றால் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம் என்றார்.

முன்னதாக மேடையில் பேசிய கே.எஸ்.அழகிரி, வேளாண் சட்டத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களும் எதிர்க்கின்றன. அரசியல் நோக்கத்திற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. 130 கோடி மக்கள் வாழும் மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும் மாநிலத்தில்  ஸ்டாலின் முதல்வராகவும் அமர வேண்டும், அதற்காக நாம் இமை பொழுதும் சோர்வாகாமல் உழைக்க வேண்டும் என்றார்.
Published by:Rizwan
First published: