திருச்சியில் அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

திருச்சியில் அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி சென்று போராட அனுமதி அளிக்க வலியுறுத்தி இலை - தழைகளை கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
    மத்திய -மாநில அரசுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் நேற்று திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் உடலில் இலை தழைகளை கட்டிக் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக உர விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்,  விவசாயத்திற்கு 24-மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் என்றும் அகிம்சை வழியில் டெல்லி சென்று போராட அனுமதி மறுக்கும் காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இலை தழைகளை கட்டிக்கொண்டு, அரை நிர்வாணத்துடன் திருச்சி-கரூர்  சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தபோது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கு சிறிது நேரம் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் திருச்சி -கரூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. மத்திய -மாநில அரசுகள் தங்களது  விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் படிக்க... இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை...

    மேலும் காவல்துறை எங்களுக்கு ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். எங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கா விட்டால் மீண்டும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கைதாகினர் இதனால் சிறிது நேரம் அந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: இ.கதிரவன், திருச்சி 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: