• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முடங்கிய மல்லிகைப் பூ சாகுபடி..! கலங்கிய வேதாரண்யம் விவசாயிகள்...!

முடங்கிய மல்லிகைப் பூ சாகுபடி..! கலங்கிய வேதாரண்யம் விவசாயிகள்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

cyclone gaja | வேதாரண்யத்தில் பலன் தரும் தருவாயில் இருந்த மல்லிகைச் செடிகள் முழுவதும் புயலால் அழிந்துப் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் வேதாரண்யத்தில் மல்லிகை சாகுபடியும் அழிந்துள்ளதால், பூப்பறிக்கும் தொழிலையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையும் பூக்களைப் போல வாடிப் போயுள்ளது.

காவிரியின் கடைமடை பகுதியான வேதாரண்யத்தில் மீன்பிடி தொழில், உப்பளம், விவசாயம் மட்டுமின்றி மல்லிகைப் பூ சாகுபடியும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள பூக்கள், தஞ்சை, திருவாரூர் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

வெயில், மழை, பனி என எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே இந்த பகுதி பெண்கள் பூப்பறிக்கச் சென்று விடுவர். பூக்கள் மலருவதற்குள் பறித்து காலை 10 மணியளவில் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம்.

இதன்மூலம் பெண்கள் கடன் வாங்குவதை தவிர்த்து, காதுகுத்து, கல்யாணம், திருவிழா போன்ற சமயங்களில் இந்த வருமானத்தைக் கொண்டு சமாளித்து வந்தனர். ஆனால் கஜா புயலின் கோர தாண்டவத்தால் தற்போது வருமானமின்றி செய்வதறியாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.

பெண்கள் மட்டுமின்றி, சிறுவர், சிறுமிகளும் அதிகாலையில் எழுந்து பூப்பறித்து கொடுத்துவிட்டு, அதன் பின்பு பள்ளிச் செல்வார்கள். தற்போது பலன் தரும் தருவாயில் இருந்த மல்லிகைச் செடிகள் முழுவதும் புயலால் அழிந்துப் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணம் வீசும் மல்லிகைப் பூ சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை, கஜா புயலால் மணமிழந்து காணப்படுகிறது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: