Home /News /tamil-nadu /

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்! கலக்கத்தில் விவசாயிகள்

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்! கலக்கத்தில் விவசாயிகள்

காட்டுப் பன்றி

காட்டுப் பன்றி

நாகப்பட்டினத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களை ஒரே இரவில்  காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தியதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஐவநல்லூர் ஊராட்சியில் சுமார் 500 ஏக்கரில் பிபிடி என்னும் நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சாகுபடி பணிகள் முடிவடைந்த நிலையில் 15 தினங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களைக் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசாமாக்கியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கர் சம்பா பயிர்களை சேதபடுதியதுடன், வரப்புகளை தோண்டியும், நெல் மணிகளைச் சேற்றில் வீணடித்தும் அட்டாகாசம் செய்துள்ளது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த இரண்டடி உயரமுள்ள நெற்கதிர்கள் முழுவதும் சாய்ந்து சேற்றில் கிடப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடைமடை பகுதி என்பதால் தற்போதுதான் விவசாயம் நடைபெற்று வருவதாக கூறுகின்ற விவசாயிகள், இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ள நிலையில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை நாசப்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு முழுவதும் தூங்காமல் வயல் பகுதியில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வனத்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகசூல் பாதிக்கும் என்பதாக கூறும் விவசாயிகள், கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயிகள் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீனாகியுள்ள நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி