ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு... அரைநிர்வாணப் போராட்டம் நடத்திய பொதுமக்கள்

வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு... அரைநிர்வாணப் போராட்டம் நடத்திய பொதுமக்கள்

வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பட்சத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் அழியும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குவாரி ஏலம் எடுத்தவர்கள் மானாமதுரை புதிய வைகை ஆற்றுப் பாலத்தின் அருகில் இருந்து மணல் குவாரிக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களாக பாதை அமைத்து வந்துள்ளனர். ஆனால் கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராம மக்கள் கல்குறிச்சி அருகே தடுப்பணை கட்டுவதற்காக கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நடைபெறுவதாக இருந்தனர்.

ஆனால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாருக்கு மணல் குவாரி அமைக்க உத்தரவிட்டுள்ளதை

தொடர்ந்து அதற்காகத்தான்  ஆற்றுக்குள் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது என தெரிந்ததை அடுத்து  இன்று காலை தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கல்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் குவாரி அமைய உள்ள பகுதிகளில் நின்று அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ |  சென்னை டூ விழுப்புரம் அரசுப் பேருந்தில் மதுபோதை பயணி தாக்கி கண்டக்டர் பலி... ஓடும் பேருந்தில் பயங்கரம்..

மேலும் பாதை அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட பொக்லைன்,ஜேசிபி இயந்திரங்கள் மீது ஏறி நின்று கோஷம் போட்டு மணல் குவாரி அமைப்பதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கடந்த முறை இதே இடத்தில் குவாரி அமைக்க நடவடிக்கை எடுத்தபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் குவாரி அமைக்காமல் சென்றுவிட்டனர். மீண்டும் அதே இடத்தில் குவாரிக்கு அரசு அனுமதி வழங்கியதை கடுமையாக கிராம மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

ALSO READ | கடலூர் கெடிலம் ஆற்றிலேயே குப்பையை தள்ளும் மாநகராட்சி

குவாரி அமையும் பட்சத்தில் இந்தப் பகுதியில் 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் அடியோடு முடங்கும் என்றும் இந்த பகுதியில் இருந்துதான் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி முதுகுளத்தூர் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பட்சத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

செய்தியாளர் : சிதம்பரநாதன்

First published:

Tags: Farmers, Kalkurichi