ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வூட்ட வயலில் கருமையான நெல் நாற்றால் ஓவியம்

பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வூட்ட வயலில் கருமையான நெல் நாற்றால் ஓவியம்

பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வூட்ட வயலில் கருமையான நெல் நாற்றால் ஓவியம்

பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வூட்ட வயலில் கருமையான நெல் நாற்றால் ஓவியம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பாரம்பரிய விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்வயலில் வித்தியாசமான முறையில் ஏர் கலப்பை, குறியீடுகளை விவசாயி வரைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் நெல் செல்வம் என்ற விவசாயி கடந்த 10 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் விவசாயம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு பாரம்பரிய நெல் ரகத்தில் ஆரம்பித்தவர் தற்போது பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறார். மற்ற பாரம்பரிய விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக இவர் திகழ்ந்தும் வருகிறார்.

சிறப்பு என்னவென்றால் இவர் பயிரிடும் பாரம்பரிய நெல்ரகங்களான மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருங்குறுவை, கருப்புக்கவுனி சீரக சம்பா, சிங்க்கார், ஜாக்கோபார் உள்ளிட்ட பதினைந்துக்கும் அதிகமான நெல் ரகங்களைப் பயிரிட்டு, அதனை நெல்லாக கிலோ ரூ.100 ரூபாய்க்கும், அதனை அரிசியாக மதிப்புக்கூட்டி கிலோ ரூ.250-க்கும் அவர் விற்பனை செய்து வருகிறார்.

பாரம்பரிய நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று கூறும் செல்வம், சர்க்கரைநோய், மூட்டுவலி, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பலவற்றிற்கும் சிறந்த மருந்தாக இது உள்ளது என்கிறார்.

மேலும், ரசாயண கலப்பில்லாத பாரம்பரிய முறையில் விவசாயிகள் பயிர்செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாரம்பரிய விவசாயம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செல்வம் தனது வயலின் நடுவே மலைப்பிரதேசத்தில் விளையும் சிங்க்கார் வகை கருமையான நெல் நாற்றால் ஏர்கலப்பை, கணிதக்குறியீடுகள், எண்கள், அவருடைய பெயர் ஆகியவற்றை வரைந்துள்ளார். இது காண்போரை வியக்க வைத்துள்ளது. இதனை பலரும் நின்று ஆச்சர்யத்தோடும் பார்த்து செல்கின்றனர்.

Published by:Rizwan
First published:

Tags: Farmers, Organic Farming