நிலத்தடி நீரை இப்படியும் சேகரிக்கலாம்... விளக்கும் புதுக்கோட்டை விவசாயி...!

மழை பெய்யும் போது ரசிக்கும் நாம் அந்த மழைநீரை சேமிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. வீரமணி என்ற ஒருவர் சேமிக்கும் மழை நீர் பத்து குடும்பங்களுக்கு மேல் பயன்படுகிறது என்றால், நாம் அனைவரும் மழைநீரை முறையாக சேமித்தால் தண்ணீருக்காக யாரையும் எதிர்பார்க்கும் நிலை வராது.

நிலத்தடி நீரை இப்படியும் சேகரிக்கலாம்... விளக்கும் புதுக்கோட்டை விவசாயி...!
புதுக்கோட்டை விவசாயி
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:29 PM IST
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு பகுதிளிலும் தண்ணீர் பற்றாக்குறை தலை விரித்தாடும் நிலையில்,  புதுக்கோட்டையில் உள்ள விவசாயி ஒருவர் மழை நீரை சேகரிக்க புது யுக்தியை பயன்படுத்துகிறார்.

ஆறு, குளம், குட்டை போன்ற நீராதாரங்ளை நம்பியிருந்த காலம் போய் தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக நிலத்தடி நீரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டமும் அதளபாதாளத்திற்கு சென்றது. விவசாயத்தையே நம்பியிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி வட்டத்திற்குட்பட்ட மரமடக்கி, அரையப்பட்டி, கொத்தமங்கலம், குலமங்கலம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் 1000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது நிலத்தடி நீர்.


இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த விவசாயி வீரமணி முழுமையான மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டைச் சுற்றி மழை நீரை சேமிக்கும் வகையில் குழாய்கள் அமைத்து சேகரிக்கப்படும் தண்ணீரை கிணற்றில் விழவைக்கிறார்.

இது போன்ற பயனுள்ள நடைமுறைகளை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லித்தர வேண்டும் என வலியுறுத்துகிறார் வீரமணியின் மனைவி வனிதா

இதே போல் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த பொதுமக்களுக்கு அரசு உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பிமழை பெய்யும் போது ரசிக்கும் நாம் அந்த மழைநீரை சேமிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. வீரமணி என்ற ஒருவர் சேமிக்கும் மழை நீர் பத்து குடும்பங்களுக்கு மேல் பயன்படுகிறது என்றால், நாம் அனைவரும் மழைநீரை முறையாக சேமித்தால் தண்ணீருக்காக யாரையும் எதிர்பார்க்கும் நிலை வராது என்பதே உண்மை.

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகிறது. இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் மிஷன் பானி என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch:  காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு...! 
First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்