கோணலாக, விநோத உருவத்தில் விளைந்த தக்காளி...காலாவதியான விதையால் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

Youtube Video

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தக்காளி பயிரிட்ட விவசாயி ஒருவர், வித்தியாசமான உருவத்தில் விளைந்த தக்காளியை விற்க முடியாமல் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

 • Share this:
  கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா, 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். இதற்காக இவர் 10 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். செடிகள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், விளையும் தக்காளியோ கோணல் மாணலாக, வித்தியாசமாக விளைந்திருக்கிறது. வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் கொரோனா தக்காளி என கிண்டல் செய்யும் அளவிற்கு தக்காளியின் தோற்றம் விநோதமாக இருக்கிறது.

  பெரும்பாலான பூக்கள் கனி தருவதற்கு முன்னதாக தானே உதிர்வதாகவும், நல்ல முறையில் தக்காளி விளைந்திருந்தால் தினந்தோறும் 4000 கிலோ வரை அறுவடை செய்திருக்க முடியும் என்று கூறும் ராஜப்பா, கிடைக்க வேண்டிய 60 லட்ச ரூபாய் வருவாய் போய்விட்டதாக வேதனைப்படுகிறார்.

  இதுகுறித்து ராஜப்பா புகார் அளிக்க, தோட்டத்தை நேரில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள், காலவதியான தரமற்ற விதைகளை பயன்படுத்தியதே குறைபாடுடன் தக்காளிகள் விளைவதற்கான காரணமென கூறி சென்றுள்ளனர்.

  சூளகிரி வட்டாரத்தில் நர்சரியில் செடி வாங்கி தக்காளி சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு சரியான விளைச்சல் இல்லை எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நர்சரிகள் மற்றும் உரக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: