கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து விவசாயி பலி... மக்கள் அச்சம்

முதலை

தீயணைப்பு துறையினரின் 4 மணி நேரமாக தேடி விவசாயி கோபலகிருஷ்ணன் உடலை மீட்டுள்ளனர்.

 • Share this:
  சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை முதலை இழுத்துச் சென்றது. தேடுதல் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

  சிதம்பரம் அருகே பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65) . இவர் தனது வயலில் விவசாய பணியை முடித்துவிட்டு தனது சகோதரர்களான செல்வமணி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார். அப்பொழுது ஆற்றில் முதலை அவரை இழுத்துச் சென்றுள்ளது

  இதனைப் பார்த்த அவரது சகோதரர்கள் செய்வது அறியாது கரையில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்குள் முதலை கோபாலகிருஷ்ணனை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அச்சத்தில் இருந்த இரண்டு பேரும் உடனடியாக ஆற்றில் இருந்து கரை ஏரியுள்ளனர்.

  Also Read : உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது ஏன்? நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ்

  பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் கோபால கிருஷ்ணனை தேடினர்.

  தீயணைப்பு துறையினரின் 4 மணி நேரமாக தேடி விவசாயி கோபலகிருஷ்ணன் உடலை மீட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி முதலை கடித்து பலியான சம்பவம் அங்கிருக்கும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றில் இருக்கும் முதலையை மாவட்ட நிர்வாகம் பிடிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: